Home பிரதான செய்திகள் ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை 35 ஓட்டங்களால் வெற்றி

ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை 35 ஓட்டங்களால் வெற்றி

by admin


இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது

நேற்றையதினம் எடின்;பரோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 323 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி துடுப்பொடித்தாடிக் கொண்டிருந்த போது மழையி குறுக்கிட்டதனால் போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் துடுப்பொடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டதனால் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினை 1-0 எனக் கைப்பற்றியுள்ளதுடன் கடந்த மூன்று வருடங்களில் தாம் பெற்றுக் கொண்ட முதலாவது இருதரப்பு தொடர் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#ஸ்கொட்லாந்து  #இலங்கை  #வெற்றி #scotland #srilanka

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More