உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்


ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசபடைகளுக்கும் தலீபான்களுக்குமிடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகின்ற நிலையில் அதனைப் பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் தலீபான் மற்றும் ஐ.எஸ். தீவிகரவாதிகள் மீது ராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காந்தஹார் மாகாணத்தில் தலீபான்களை நேற்றுமுன்தினம் குறிவைத்து ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 9 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் அதிகளவான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

அத்துடன் குண்டூஸ் மாகாணத்தில் தலீபான்கள் மீது ராணுவம் நேற்று நடத்தி தாக்குதலில் 12 தீவரவாதிகள் கொல்லப்பட்டதுடன்
12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் நங்கர்ஹார் மாகாணத்தின் ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதலி 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 #terrorist  #afghanistan #ஆப்கானிஸ்தானில் #தீவிரவாதிகள் #ஐ.எஸ்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.