உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிப்பு


பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அதிகளவான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் அனைவருக்கும் எச்.ஐ.வி இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 24ம் திகதி ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாத போதும் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி காணப்பட்டுள்ளதனையடுத்து இது எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#children  #affected  #HIV  #pakistan #பாகிஸ்தானில்  #குழந்தைகள் #எச்.ஐ.வி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.