இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 2018 இல் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 ஓகஸ்டில் சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தற்போது கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஆரணி தவபாலன் தெரிவித்துள்ளார்

வறுமையான மாவட்ட என்ற அடிப்படையில் அதிகளவான சமூர்த்தி பயனாளிகள் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைவாக 2014 தொடக்கம் 2018 வரை பல தடவைகள் புதிய சமூர்த்தி பயனாளிகள் பட்டியல் தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது 11505 குடும்பங்கள் சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் அவர்களே இன்று வரை சமூர்த்தி பயனாளிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் சமூர்த்திக்குள் உள்வாங்கப்பட இருகின்றார்கள் எனவே இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் சில ஆயிரக்கணக்கானவர்கள் சமூர்த்தி திட்டத்தின் நன்மைகளை பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

#கிளிநொச்சி   #சமூர்த்தி #கொடுப்பனவு #kilinochchi #samurthy

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.