இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை…


வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தி திட்ட்ங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து பயணிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிடுள்ளார்.  யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சனை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திடடமிடப்படுகிறது.

எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த திடடம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்பவாதிகளில் ஒருவர் கூட தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை.

“மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக்கறை இன்ரி செயற்படுகின்றனர். தான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திடடம் தொடர்பில் தன்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டள்ளார்.

இதேபோல, “அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் விடுதலைக்காக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட தனக்கு சொல்லவில்லை.

நாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தமக்கு இதுவரை 4 மொடடைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்படட இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொடடைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார். #வடமாகாணஆளுநர் #சுரேன்ராகவன் #அபிவிருத்தி

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.