என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்
அண்மைக்காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்த பிரகாஷ்ராஜ் பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்து வந்த நிலையில் அரசியலிலும் இறங்கினார்
இதனையடுத்து பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கிய அவர் வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்த போதும் அவர் தோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்திலி;ட்டுள்ள பதிவில் என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்
#கன்னத்தில் #அறை விழுந்துள்ளது #பிரகாஷ்ராஜ் #கவுரி லங்கேஷ்
Add Comment