சினிமா

ஜெயம் ரவி நாயகியாக நடிக்கும் நித்தி அகர்வால் :



இயக்குநர் லட்சுமனன், ஜெயம் ரவியுடன் மூன்றாவது முறையாக இணையும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.  ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முன்னைய இரண்டு திரைப்படங்களிலுமே ஜெயம் ரவியின் நாயகியாக  ஹன்சிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர் நடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். ஜெயம் ரவியின் உறவினரான சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
#ஜெயம் ரவி  #நாயகி  #நித்தி அகர்வால்  #இமான் #ஹன்சிகா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap