Home பிரதான செய்திகள் இங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

by admin


சவுதாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. காயம் காரணமாக இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் விளையாடாத நிலையில் பதில் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் வழிநடத்திய அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களத்தடுபிபனை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்கு 297 ஓட்டங்களை எடுத்திருந்தது.இதனையடுத்து 298 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்ததனையடுத்து அவுஸ்திரேலியா 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#இங்கிலாந்து  #அவுஸ்திரேலியா  #australia  # england #

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More