இந்தியா பிரதான செய்திகள்

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல்


மலேசியாவுக்கு கடத்தும் திட்டத்துடன் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 49.5 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ளூ கடத்தல் குழுவின் தலைவர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சில நாட்களுக்கு முன்பு மும்பை, டெல்லியில் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 25 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்த நிலையில், மயிலாப்பூரில் வைத்து காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சூளைமேட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 49.5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#மலேசியா  #போதைப் பொருள் #பறிமுதல் #drugs

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.