தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தார்களென, சந்தேகத்தில் ஹொரவப்பொத்தானை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட, 5 சந்தேகநபர்களினதும் வங்கி கணக்குகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் இருப்பதாக காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரி, அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியர், அரபி மொழி கற்பிக்கும் பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர். #தேசியதௌஹீத்ஜமாஅத் #NTJ
Add Comment