உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸின் 3 பேருக்கு, ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது…

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியிருந்த ஐ.எஸ். இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றதுடன் பலரைக் கைது செய்து ஈராக்கிடம் ஒப்படைத்திருந்தது.

இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு இவ்வாறு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.