உலகம் பிரதான செய்திகள்

நேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வேறு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நேற்றையதினம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குண்டுவெடிப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளில் நேபாள இராணுவத்தினரும் காபவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர் மேலும் இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.