இலக்கியம் பிரதான செய்திகள்

முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது, தாக்குதல்…


முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது, தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொக்கிளாய் – முல்லைத்தீவு காவற்துறைப் பொறுப்பதிகாரிகள், இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் பேசி அச்சுறுத்தியுள்ளனர்.

செம்மலை பிள்ளையார் கோவில் பெயர் பலகை நீக்கப்பட்டமையை கண்டித்து , பெயர் பலகையை மீள நாட்ட நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊரவர்கள் சென்ற போது , அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குவின் அழைப்பில் அங்கு சென்ற காவற்துறையினர் ஊரவர்கள் அனைவரையும் நிலத்தில் அமர்த்தி அவர்களின் பதிவுகளை மேற்கொண்டனர்.

அது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை படம் எடுக்க விடாது தடுத்த காவற்துறையினர் , ஊடகவியளாலர்களை படம் எடுத்து அச்சுறுத்தினார்கள். அதேவேளை அப்பகுதியில் பிக்கு CCTV கமராக்களையும் பொருத்தி உள்ளார். அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தியினை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களில் குமணனும் ஒருவர்.

இந்நிலையில் நேற்றைய சம்பவங்கள் தொடர்பில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து நீதிவான் CCTV கமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து குறித்த CCTV கமராக்களை அகற்றுமாறு பிக்குவிடம் காவற்துறையினர் கூறிய போதிலும் பிக்கு அதற்கு உடன்படவில்ல.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக காவற்துறையினர் செயற்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களை புகைப்படம் எடுக்கவிடாது , காவற்துறையினர் தடுத்துள்ளனர். அதன் போது ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , தமிழர்கள் தொடர்பிலும் தகாத வார்த்தைகளால் பேசி , இனவாத கருத்துக்களாலும் பேசியுள்ளனர்.

அதேவேளை நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற காவற்துறையினர் பிக்குவிற்கு சார்வாக செயற்பட்டனர் எனவும் குற்றம் சாட்டபட்டப்பட்டுள்ளது. #முல்லைத்தீவு #ஊடகவியலாளர்குமணன் #செம்மலைபிள்ளையார்கோவில்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.