3
கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி மேல்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது அவரை சோதனைக்கு உட்படுத்திய காவற்துறை உத்தியோகத்தரை காயப்படுத்தியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் இன்று தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Spread the love