இந்தியா பிரதான செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதனையடுத்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

அரசை நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#பிரதமர்  #மோடி  #தலைமை  #மத்திய அமைச்சரவை,

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.