இலங்கை பிரதான செய்திகள்

சமூக விரோதிகள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் நடவடிக்கை இல்லை

கிளிநொச்சியில் பல்வேறு சமூக விரோத செயற்பாட்டில் ஈடுப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் அவர்களின் பெயர் விபரங்களுடன் புலனாய்வு அறிக்கைகள் பல மாதங்களுக்கு முன் காவல்துறை திணைக்களத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம்(29) கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவத்தில் பதினைந்துக்கு மேற்பட்ட ரவுடிகள் ஈடுப்பட்டிருந்தனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அதில் சிலரின் பெயர்களும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பெயர்களுக்குரியவர்கள் தொடர்பில் ஏற்கனவே புலனாய்வு அறிக்கைகள் காவல்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடவடிக்கைகள் இன்மையால் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்கிறது.

இந்த ரவுடிக்கும்பலைச் சேர்ந்த பலர் பல தடவைகள் பல குற்றாசாட்டுக்களுக்காக சிறைச்சாலை சென்று வந்தவர்கள், அவர்கள் அணைவரும் ஏதோவொரு வழக்கில் பிணையில் இருப்பவர்கள். இந்த நிலையில் தொடர்ந்தும் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் பற்றியும் இவர்களின் செயற்பாடுகள் பற்றியும் புலனாய்வு அறிக்கைகள் காவல்துறை திணைக்களத்திற்கு சமர்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எனத் தெரிய வருகிறது.

எனவே இவ்வாறான சமூக விரோதிகள் தொடர்பில் காவல்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், முளையிலேயே இவற்றை கிள்ளிவிடாது விட்டால் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறுவது போன்று கிளிநொச்சியிலும் சம்பவங்க்ள இடம்பெறும் எனவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

#சமூக விரோதிகள்   #புலனாய்வு அறிக்கை  #காவல்துறை திணைக்களம் #கிளிநொச்சி  #செல்வாநகர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.