கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஓய்வு பலன்களுக்காக 1,600 கோடி ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், 2013 நிதி ஆண்டு வரை பணிக்கு சேர்ந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆகும். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசின் நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் 2014 நிதி ஆண்டு முதல் வேலைக்கு சேரும் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#கேரள மாநிலத்தில் #அரச ஊழியர்கள் #ஓய்வு
Spread the love
Add Comment