Home உலகம் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற நபர் கைது

வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற நபர் கைது

by admin


அமெரிக்காவின் வோசிங்டன் நகரில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை ரகசிய காவல்துறையினாத் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றையதினம் வெள்ளை மாளிகையில் வழக்கம்போல் தனது பணிகளை கவனித்த ஜனாதிபதி;ட் டிரம்ப், வெளிநாட்டு பயணத்துக்காக அங்கிருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த ரகசிய காவல்துறையினர் அவரை பின்வாங்கிச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த போதும் அவர் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ; முன்நோக்கிச் செல்ல முற்பட்டதனையடுத்து அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#வெள்ளை மாளிகை #கைது #whitehouse

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More