உலகம் பிரதான செய்திகள்

வர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா


தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தியிருந்தார்.  அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததனையடுத்து உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்குமிடையே வர்த்தகப்போர் மூண்டது.

இதனையடுத்து இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன ஜனாதிபதிஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.  எனினும் இருநாடுகளுக்குமிடையில் வர்த்தகப் போர் தொடர்ந்து வந்த நிலையில் சீனா நேற்றையதினம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே இவ்வாறு தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் எனவும் எந்த பிரச்சினை வந்தாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்சினையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது கனவிலும் சாத்தியமற்றதாகும் எனவும் குறித்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

#trade war  #china #white report #ஜனாதிபதி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.