பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் – பெடரர் – ஸ்டீவன்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சம்பியனான ரபேல் நடால், ரொஜர் பெடரர், மற்றும் ஸ்லோனே ஸ்டீவன்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நான்காவது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் லக்னாசியோ லொன்டெரோவை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

அத்துடன் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் ஆர்ஜென்டீனாவின் லியனார்டோ மேயரை எதிர்கொண்டு 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

அதேவேளை ஐக்கிய அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீவன்ஸ் ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை எதிர்கொண்டு 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

#பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்  #ரபேல் நடால் #ரொஜர் பெடரர் #ஸ்லோனே ஸ்டீவன்ஸ் #காலிறுதி #Roger Federer #Rafael Nadal #Sloane Stephens  #French Open Tennis

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.