இந்தியா பிரதான செய்திகள்

காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் 13 பேருடன் அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கிச் சென்ற இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் மெஞ்சுகா விமானப்படை தளத்தை சென்றடையவில்லை என்பதுடன் விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது#காணாமல் போயுள்ள  #இந்திய #விமானப்படை #ராணுவம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.