இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது

யாழில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பாகங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் சோதனை சாவடிகள் அதிகமாக உள்ளதாகவும் , சோதனை சாவடிகளில் கெடுபிடிகள் இருப்பதாகவும் அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதை அடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் கட்டளை தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அதன் போது , தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக அமைச்சர் தான் கூறியதாகவும் , அதற்கு கட்டளை தளபதி , ஐஎஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன் என உறுதி அளித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
#யாழில் #இராணுவ #சோதனை சாவடி  #தர்ஷன ஹெட்டியாராச்சி   #மனோகணேசன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.