பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை


12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை இலங்கை 34ஓட்டங்களால் வென்றுள்ளது. கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்தநிலையில் இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டதனையடுத்து இலங்கை அணி 201 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ஓட்டங்களும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி 4 விக்கெட்டும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி, 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் பிரதீப் 4 விக்கெட்களையும் மலிங்க 3 விக்கெட்டுக்களையும் இசுரு உதனா, திசர பெரேரா தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

#afghanistan  #sri lanka #worldcup #முதல் வெற்றி #உலகக் கிண்ணத் தொடரில்  #இலங்கை #ஆப்கானிஸ்தான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.