பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் – பெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சம்பியனான ரபேல் நடால் மற்றும் ரொஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் 11 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய ஸ்பெயினின் ரபெல் நடால் ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டு 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்றுநுஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் சகநாட்டவரான வாவ்ரிங்காவை எதிர்த்து போட்டியிட்டு 7-6 (7-4), 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் முன்னேறியுள்ளார்.
2012-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு வந்துள்ள பெடரர் அடுத்து நடாலுடன் போட்டியிடவுள்ளார். நடாலுடன் இதுவரை 38 முறை விளையாட்டியுள்ள பெடரர் அதில் 15-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பித்தக்கது

#பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்  # நடால்  #பெடரர்  #அரையிறுதி  #French Open  #Rafael Nadal #Roger Federer

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap