கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மக்னொன் இன்று (05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.குறித்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களிற்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை அவர் விரும்புவதாகவும் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
#கனடா தூதுவர் #டேவிட் மக்னொன் #ஒற்றுமை
Spread the love
Add Comment