உலகம் பிரதான செய்திகள்

இனவெறியை ஒழிக்கும் யூரியூப் நிறுவனத்தின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது

இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்யும் யூரியூப் நிறுவனத்தின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்ற நிலையில் இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூரியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யூரியூப் நிறுவனம் எப்போதுமே வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை கொண்டது எனவும் தற்போது மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம் என்ற போதிலும் படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூரியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  #இனவெறி #யூரியூப்  #வீடியோக்கள்  #youtube

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.