நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என காவற்துறையினர் தெரிவித்தனர். அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு சென்ற கும்பல் 16 வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. தலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் காவற்துறையினர் கூறினர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.
முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன், மாணவனை வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. #நவாலி #வாள்வெட்டுக்கும்பல் #காவற்துறையினர் #சிந்தாமணிப்பிள்ளையார்
Spread the love
Add Comment