பிரதான செய்திகள் விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டு – நெய்மரிடம் விசாரணை


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நெய்மார் மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா டிரின்டேட் என்ற 26 வயதான மொடல் அழகி கடந்த வாரம் பாலியல்குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

நெய்மாருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்த போது நெய்மார் வலுக்கட்டாயமாக தன்னைபாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்
எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த நெய்மார் தன்னிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த மாதிரி நாடகம் ஆடுவதாக தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நெய்மர் நேற்று முன்தினம் ரியோ டி ஜெனீரோவில் உள்ள காவல் நிலைய தலைமையகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டார் அணிக்கெதிரான நட்புறவு போட்டியின் போது ஏற்பட்ட காயம் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நெய்மார் வீல்சேரில் அமர்ந்தபடியே விசாரணையில் முன்னிலையாகயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Brazil #Neymar #பாலியல் குற்றச்சாட்டு  #நெய்மர் #விசாரணை

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.