பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன்

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறையாகும்.

2014-ம் ஆண்டில் டென்னிசில் இருந்து விலகி கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுத்த 23 வயதான ஆஷ்லி பார்டி 2016-ம் ஆண்டில் மீண்டும் டென்னிஸ் களம் புகுந்து இப்போது இந்த வெற்றியை பெற்று அவர் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்  #அவுஸ்திரேலியா #சம்பியன் #ஆஷ்லி பார்டி #french open

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap