இலங்கை பிரதான செய்திகள்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா – பாதுகாப்பு சோதனைகளின் பின்பே ஆலயத்தினுள் பக்தர்களுக்கு அனுமதி :

எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்கள அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவம், காவல்துறை அதிகாரிகள் உள்ளடங்களாக 15 திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்த கலந்துரையாடலில் குறிப்பாக பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

-இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

#மடு #ஆடி#,திருவிழா #பாதுகாப்பு  #பக்தர்களுக்கு #அனுமதி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.