இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பதுளையில் தீ விபத்து – பெண் உயிரிழப்பு


பதுளை, பிங்அராவ, ஜலனல வீதியில் உள்ள வீடொன்றில்இன் ( 10.06.2019 ) இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் வீட்டினுள் உயிரிழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர். தம்மிகா ரத்னாயக்க எனும் 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், காலை இந்த விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் மகன்கள் இருவரும் பாடசாலைக்கு சென்றிருந்ததாகவும் மகள் வேலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்த போதும் எவ்வித வெடிப்பு சம்பவமும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பதுளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

#பதுளை  #தீ விபத்து  #பெண் #உயிரிழப்பு

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.