Home இலங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், இலங்கை செல்லவுள்ளார்…

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், இலங்கை செல்லவுள்ளார்…

by admin

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo), இந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு பயணம்  செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் இலங்கைப்  பயணத்தில் ஈடுபடவுள்ளதாகவும்,   இந்த நாட்களில் இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் அவர் இந்த பயணத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MikePompeo #அமெரிக்கஇராஜாங்கச்செயலாளர் #அமெரிக்கஇராஜாங்கத்திணைக்களம் #இந்தியபசுபிக்வலயம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More