பிரதான செய்திகள் விளையாட்டு

உலககிண்ணத் தொடரில் இன்று அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் போட்டி

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில் இன்றையதினம் நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியா அணியும் முன்னாள் சம்பியனான பாகிஸ்தான் அணியும் போட்டியிடவுள்ளன. அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் போட்டியில்; ஆப்கானிஸ்தானையும், 2-வது போட்டியில்; மேற்கிந்திய தீவுகளையும் வென்றுள்ளதுடன் 3-வது லீக் போட்டியில இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

அதேவேளை பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில்; மேற்கிந்தியதீவுகள் அணியிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் வெற்றியீட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கெதிரான போட்டி மழை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பலமான போட்டியாக இன்றை போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதேவேளை போட்டி நடைபெறவுள்ள டவுன்டானில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#உலககிண்ண போட்டி  #அவுஸ்திரேலியா #பாகிஸ்தான் #போட்டி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.