உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்கா போலந்துக்கு மேலும் 1000 படையினரை அனுப்பவுள்ளது

President Donald Trump speaks during a news conference with Polish President Andrzej Duda in the Rose Garden of the White House, Wednesday, June 12, 2019, in Washington. (AP Photo/Evan Vucci)

அமெரிக்கா போலந்துக்கு மேலும் 1000 படையினரை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள 52000 அமெரிக்க படையினரை மீள அழைக்கவுள்ளதுடன், ட்ரோன் மற்றும் ஏனைய இராணுவ கட்டமைப்புக்களை அங்கு நிலைநிறுத்தவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜேர்மனியில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை நிலையாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.