
கிளிநொச்சி மாவட்டபாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் ஒன்றினை இன்று(14-06-2019)அனுப்பிவைத்துள்ளார். கடந்த2019.04.21 ஆம் திகதிநாட்டில் இடம்பெற்றதொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைஅடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட 2019.05.06 ஆம் திகதியிலிருந்து பாதுகாப்புநடவடிக்கைகள் என்றபேரில் கிளிநொச்சிமாவட்டபாடசாலைகளில் இராணுவத்தினரும்,சிவில் பாதுகாப்புபடையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதுநாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் மாறி இயல்பு நிலைமீளத்திரும்பியுள்ள போதும் இன்றுவரை பாடசாலைகள் முழுநேர இராணுவப் பாதுகாப்பிலிருந்தும்,கண்காணிப்பிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை என்பதோடு பெற்றோர்கள் ,பழையமாணவர்கள்,மாணவ தலைவர்களை விடுத்து இராணுவத்தினரும்,சிவில் பாதுகாப்புபடையினருமேமாணவர்களையும்,அவர்களதுபுத்தகப்பைகளையும் சோதனைக்குட்படுத்துவதை இன்றையதினம் கூட கிளி/கிளிநொச்சிமகாவித்தியாலயத்தில் என்னால் நேரடியாகஅவதானிக்கமுடிந்தது.
அதேவேளை கடமைநிமித்தமோ, அவசியதேவைப்பாடுகள் குறித்தோவலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள்,பழையமாணவர்கள் கூட பாடசாலைகளுக்குள் உள்நுழையமுடியாதநிலைகாணப்படுவதோடு, இன்றையதினம் மேற்படிபாடசாலைக்குநான் நேரடியாகச் சென்றிருந்தபோதுஎன்னாலும் இயல்பாக அப் பாடசாலைக்குள் செல்லமுடியாதநிலையே இருந்தது.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையிலும், கொழும்பிலுள்ளபிரபலதேசியபாடசாலைகளில் கூட இராணுவப் பிரசன்னம் அற்றிருக்கும் சூழலிலும் தமிழர்கள் வாழும் கிளிநொச்சிமாவட்டபாடசாலைகளை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குள் வைத்திருப்பதுமக்கள் மத்தியில் விசனத்தையும்,அச்சஉணர்வையும் தோற்றுவிக்கும் செய்றபாடாகவே உள்ளது.
எனவே தயவுசெய்துதாங்கள் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எமது பிரதேசபாடசாலைகளை இராணுவமயப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கும்,பாடசாலைச் சூழலை இயல்புநிலைக்குகொண்டுவருவதற்கும்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மனஅழுத்தங்களும்,கெடுபிடிகளும் அற்ற இயல்பான சூழலில் கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஆவனசெய்யுமாறுதங்களைதயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்
#கிளிநொச்சி #வட மாகாண #இராணுவப் பிரசன்னம் #சிவஞானம் சிறிதரன்
Add Comment