Home இலங்கை உயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..

உயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..

by admin

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்டகட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் ‘ஒருகாலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதேபடைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் பாடசாலைகளின் வாயிலில் காவலுக்குநிற்கிறது’ என்று. அதற்கு கட்டளைத ;தளபதி சொன்னாராம் அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் அங்கேநிற்கிறோம் என்று.

யாழ். சர்வமதசங்கத்தைச் சேர்ந்த ஓர் இந்துமத தலைவருக்கும் மேற்சொன்ன தளபதி அவ்வாறுதான் கூறியிருக்கிறார். தமிழர்களை பாதுகாப்பதற்காகத்தான் சோதனைச் சாவடிகளும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக.

அதே தளபதியிடம் கடந்தகிழமை பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக அமைச்சர் மனோகணேசன் கதைத்திருக்கிறார். அதன்போது வடக்குகிழக்கில் சோதனை நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுவதுபற்றிய முறைப்பாடுகளை அவரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்குபதில் கூறிய மேற்படி தளபதி தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் அவ்வாறுசெய்கின்றோம் என்று கூறியிருக்கிறார். அமைச்சர் மனோகணேசன் கேட்டுக்கொண்டதையடுத்து ஊடகக் கவனிப்புடைய எ 9சாலை போன்றவற்றில் சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஆனால் ஊடகக் கவனிப்புக் குறைந்த உள்வீதிகளில் உதாரணமாக கிளிநொச்சியின் உள்வீதியான பன்னங்கண்டி வீதியில் சோதனைச் சாவடியில் பயணிகள் வாகனங்களைப் பதியவேண்டும். அப்படித்தான் காரைநகரின் வாசலில் பொன்னாலைச் சந்தியில் சோதனைகள் உண்டு.வாகனப் பதிவும் உண்டு.

வடக்கு கிழக்கில் பாடசாலைகளின் முன் இரண்டு படையாட்கள் காவலுக்கு நிற்கிறார்கள். பாடசாலைகள் தொடங்கும் முடியும் நேரங்களில் அவர்கள் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் மிகவும் ரிலாக்சாக நிற்கிறார்கள். பாடசாலைப் பிள்ளைகளை தாங்களே பாதுகாப்பதான ஒருதோரணை அவர்களுடைய முகபாவனைகளிலும் உடல் மொழியிலும் காணக் கிடைக்கிறது.  அவ்வாறு பாதுகாக்கும் கடமையின் போது அவர்கள் எதிர்த் தரப்பிடம் இருந்து வரக்கூடிய ஆபத்துக்களை குறித்த அச்சமும் திகிலுமின்றி மிகவும் சாவகாசமாக ஒருவித கதாநாயகத் தனத்தோடு பள்ளிக்கூடங்கள் பொது இடங்களின் வாசல்களிலும் கோவில் வாசல்களிலும் திருவிழாக்களின் போதும் காணப்படுகிறார்கள்.

அவர்கள் அவ்வாறுரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. இது ஈழப் போர்க்களம் அல்ல. இந்தயுத்தம் ஆயுதமேந்திய படைகளைக் குறிவைக்கவில்லை. முhறாக ஆயுதம் ஏந்தியிராத அப்பாவிகளைத்தான் இலக்குவைத்திருக்கிறது. நாங்களும் இந்தயுத்தத்தின் ஒருபகுதி என்பதைக் குறித்த எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இன்றி வழமைபோல தேவாலயங்களில் வழிபடச் சென்ற அப்பாவிகளான பக்தர்களைத்தான் ஜிகாத் அமைப்பு வேட்டையாடியிருக்கிறது. எனவே இந்தயுத்தத்தில் படைத்தரப்பு ஓர் இலக்கு அல்ல என்பது படைத் தரப்பை பெருமளவிற்கு ரிலாக்சாகவைத்திருக்கிறது. அதோடு கடந்தபத்தாண்டுகளாக அவர்களுக்கு பெரிய அளவுவேலைகள் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது வேலைகிடைத்திருக்கிறது. அதுவும் காவல் காக்கும் வேலை. எனவே ஒருவிதரிலாக்ஸான மனோநிலையோடு கதாநாயகத்தனமாக அவர்கள் பாடசாலைகளின் முன்னேநிற்கிறார்கள். வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் கூலிங் கிளாஸ்களையும் அணிந்தபடிநிற்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக உலகசமூகத்தின் முன் எந்த ஒருபடைத்தரப்பை தமிழ் மக்கள் போர்க் குற்றவாளிகளாக காட்டிவருகிறார்களோ எந்த ஒருபடைத்தரப்பு இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் குற்றம்சாட்டி வருகிறார்களோ அதேபடைத்தரப்பு இப்பொழுது தமிழ் பள்ளிக்கூட பிள்ளைகளையும் பக்தர்களையும் பாதுகாக்கும் ஒரு பொறுப்பை ஏற்றிருப்பது என்பது ஒருதலைகீழ் மாற்றம்.

ஒருபுறம் ஐநாவில் தமிழ் தரப்பு போர்க் விசாரணைகளுக்கு எதிராக நீதிகேட்கிறது. இன்னொரு புறம் எந்த ஒரு படைத்தரப்புக்கு எதிராக ஐநாவில் தமிழ்த் தரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றதோ அதே அதேபடைத்தரப்பு தமிழ் தரப்பின் பள்ளிக்கூடங்களையும் ஆலயங்களையும் பாதுகாக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்தமுரண் வளர்ச்சியானது ஜிகாத் தாக்குதல்களின் நேரடிவிளைவாகும.; இது அனைத்துலக அளவில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்த கூடியது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் தமிழ் அரசியலானது இந்தஒருவிடயத்தில் மட்டும் தான் பலவீனப்பட்டுள்ளது என்பது அல்ல. இதைவிட வேறுபல இடங்களிலும் அது பலவீனமடைந்துள்ளது

முதலாவதாக கூட்டமைப்பின் யாப்பு உருவாக்கமுயற்சிகள் முழுவதுமாக கைவிடப்பட்டுவிட்டன. யாப்பு முயற்சிகளைக ;காட்டித்தான் சம்பந்தர் தனதுவாக்காளர்களின் நம்பிக்கைகளை கட்டியெழுப்பிவந்தார.; ஆனால் இப்பொழுது யாப்புமுயற்சிகள் பின் தள்ளப்பட்டுவிட்டன.

இரண்டாவதாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் செயல்பாட்டாளர்களும் முடக்கப்பட்டிருக்கிறார்கள். யுhரை முடக்க வேண்டுமோ அவர்களின் மீதுபயங்கரவாதத் தடைச் சட்டத்தை பிரயோகிக்கலாம் என்ற நிலைமை தோன்றியிருக்கிறது.

மூன்றாவது -ராஜபக்சஅணிவெல்லக் கூடியவாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. ஜிகாத் தாக்குதல்களின் விளைவாகசிங்களபௌத்தபெருந்தேசியவாதம் மறுபடியும் மேலோங்கத் தொடங்கியுள்ளது. இது இனவாதஅலையொன்றைத் தோற்றுவிப்பதற்குதேவையானதளத்தைஉருவாக்கிக் கொடுத்துள்ளது.

ஜிகாத் தாக்குதல்களுக்கு முன்பு மஹிந்த அணி யாப்புருவாக்க முயற்சிகளைமுன் வைத்துஒரு இனவாத அலையைத் தோற்றுவிக்கக் கூடிய நிலைமைகளே காணப்பட்டன. ஆனால் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிரான ஒருசிங்களப் பொது உளவியலை தூண்டிவிடுவதன் மூலம் இனவாத அலையை பெரிதாக்கலாம். இதனால் முஸ்லிம் வாக்குகளை சிலவேளைகளில் ராஜபக்ச இழக்கநேரிடலாம். எனினும் தனிச்சிங்கள வாக்குகளால் அரசுத்தலைவர் ஆகும் திட்டம் எதுவும் அவர்களிடம் இருந்தால் அவர்கள் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை சாட்டாகவைத்து இனவாத அலையை ஆகக் கூடியமட்டும் தூண்டக் கூடும்.

நாலாவது- உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து தமிழ்த்தரப்பு உலகஅரங்கில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் செய்துவந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அனைத்துலக யுத்தகளத்திற்குள் நாடு இழுத்துத்து வரப்பட்டுவிட்டது. இதனால் அனைத்துலக சமூகத்தின் கவனம் ஜிகாத் அமைப்புக்கு எதிராகக் குவிக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழ் மக்கள் முன் வைத்த போர்க் குற்றவிசாரணை இனப்படுகொலைக்கு எதிரான நீதி போன்றவிடயங்கள் பின் தள்ளப்பட்டுவிட்டன. அது மட்டுமல்ல உலக சமூகம் இப்பொழுது ஜிகாத்தை எப்படி தோற்கடிக்கலாம் என்பதிற்தான் தனதுகவனம் முழுவதையும் குவித்துவருகிறது. இதனால் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்படக்கூடிய கொடுமைககளின் மீது உலகத்தின் கவனம் அதிகம் ஈர்க்கப்படாது.

ஆனால் இந்த இடையூட்டுக்குள் அரசாங்கமும் அதன் உபகரணங்களான திணைக்களங்களும் மகாசங்கத்தவர்களும் யுத்தத்தை வேறுவழிகளில் தொடர்கிறார்கள். முல்லைத்தீவில் ஒருபிள்ளையார் கோயிலுக்கு அருகே பௌத்தகோவில் கட்டப்படுக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறிபிக்குகள் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். திருகோணமலையில் கன்னியாவெந்நீர் ஊற்றுப் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவுக்கு கடந்தவாரம் வருகைதந்த அரசுத்தலைவர் அங்கே ஒருதமிழ் குளத்தின் பெயரை சிங்களத்தில் மாற்றி எழுதி அதில் மீன் குஞ்சுகளை விட்டிருக்கிறார். அதாவது உலகத்தின் கவனம் ஜிகாத்தை எப்படி முறியடிப்பது என்பதில் குவிக்கப்பட்டிருக்கும் ஒருகாலகட்டத்தில் அரசாங்கமும் அதன் உபகரணங்களும் தமிழ் மக்கள் மீது யுத்தத்தை வேறுவழிகளில் தொடர்ந்துவருகின்றன.

ஐந்தாவது- புதியயாப்பொன்றைக் கொண்டுவரப்போவதாக வாக்களித்த கூட்டமைப்பு இப்பொழுது வீதிகளை திருத்துவதிலும் கட்டடங்களைக் கட்டிஎழுப்புவதிலும் தனதுகவனத்தைக் குவித்துவருகிறது. கம்பெரலிய திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் அபிவிருத்தி அரசியலில் ஒருபங்காளியாகியதன் மூலம் தமிழ் மக்களின் உரிமை அரசியலை பின்தள்ளும் ஒருவேலைக்குக் கூட்டமைப்பு உடந்தையாக காணப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான மேற்கண்ட விளைவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒருவிடயம் தெளிவாகத் தெரிகிறது. அத்தாக்குதல்கள் தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தி இருக்கின்றன. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் தமிழ் மக்களின் உரிமைமைய அரசியலுக்கு ஒப்பீட்டளவில் பாதகமான ஒருசூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒருபின்னணியில் புதிய நிலைமைகளை எதிர்கொள்ள புதிய உபாயங்களுடன் களமிறங்கும் புதியதலைமைகள் தமிழ் மக்களுக்குதேவை.

இந்தியாவில் மறுபடியும் நரேந்திரமோடி தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். பதவியேற்றதும் அவர் முதலாவதாக மாலைதீவுக்கும் இரண்டாவதாக இலங்கைக்கும் வருகைதந்திருக்கிறார். மாலைதீவின் முன்னைய அரசாங்கம் சீனாவுக்கு நெருக்கமாயிருந்தது. அதுசீனாவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்திருந்தது. அந்த உடன்படிக்கையானது மாலைதீவை சீனாவின் கடல் வழிப் பட்டுப் பாதைத் திட்டத்துக்குத் திறந்துவிடுவதாக அமைத்தது. அது சீனாiவின் பெல்ட் அண்ட் றோட் திட்டத்தில் மாலைதீவையும் பங்காளியாகியது. இச்சீனச் சார்பு அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் தோற்கடிக்கப்பட்டு இப்போதுள்ள புதியஅரசாங்கம் பதவியேற்றது. இவ்வரசாங்கம் சீனாவைவிடவும் இந்தியாவை நெருங்கிவருகிறது. நரேந்திரமோடி, மாலைதீவின் புதிய அரசுத் தலைவருடன் பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட ஆறு உடன்படிக்கைகளைச் செய்துள்ளார். குறிப்பாக மாலைதீவுக் கடலில் சீனாவின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் இந்தியக் ராடர்களைப்; பொருத்தும் ஓர் உடன்படிக்கையும் இவற்றுள் அடங்கும்.

மோடியின் மாலைதீவு விஜயத்தின் பின் மாலைதீவுகளின் அரசுத்தலைவர் இலங்கைக்கு அடுத்தவார இறுதியில் வருகிறார். ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று அவர் வருகிறார். எனவே இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தல் ஒருதெளிவான சித்திரம் கிடைக்கும.; அச்சித்திரத்தை விளங்கி ஈழத்துதமிழ் அரசியலைத் திட்டமிடவல்ல தலைவர்கள் தேவை.

அதேசமயம் தமிழகத்தில் நரேந்திர மோடியின் கட்சிதோல்வி கண்டிருக்கிறது. தமிழகம் மீண்டும் ஒருதடவை தனது தனித்துவத்தை வெளிக்காட்டியிருக்கிறது. புதிய முதல்வர் ஸ்டாலினை எப்படி அணுகுவது ? ஈழத் தமிழர்களுக்கு அதிகம் நெருக்கமாகக் காணப்படும் வைகோவின் கை ஒப்பீட்டளவில் ஓங்கியிருக்கிறது. தொல். திருமாவளவன், கனிமொழி போன்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் எப்படிக் கையாள்வது?

அதாவது உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களின் பின்னரான உலகசூழலையும உள்நாட்டுச் சூழலையும் இந்தியபொதுத் தேர்தலின் பின்னரானபிராந்தியச் சூழலையும் குறிப்பாக தமிழகச் சூழலையும் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து எப்படிக் கையாள்வது என்பது குறித்து புதிய தரிசனத்தையும் புதிய வியூகத்தையும் கொண்ட ஒருபுதிய தமிழ்த்தலைமை தேவை. இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் தலைமைகளுள் யார் அப்படிப்பட்ட ஒருதலைமையாக மேலெழப் போகிறார் ? #நிலாந்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More