இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – சிறுமி உட்பட மூவர் காயம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லைப்பகுதி மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும் இந்திய ராணுவம் பதி;ல்தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நிலையில் இந்த தாக்குதல்களினால் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 11 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தெரிவித்துள்ள இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்

#ஜம்மு காஷ்மீர்  #பாகிஸ்தான்  #சிறுமி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.