இலங்கை பிரதான செய்திகள்

கூட்டணி அமைப்பது சம்பந்தமான, 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரத்தானது..


புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்று எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவிருந்தது.

எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தது.  இந்நிலையில், கூட்டணி அமைப்பது சம்பந்தமான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே, குறித்த பேச்சுவார்த்தைகள் 5 முறை இடம்பெற்ற போதும் எந்தவித இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி #ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன #புதியகூட்டமைப்பு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap