உலகம் பிரதான செய்திகள்

நீதிமன்ற விசாரணையின் போது எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி விசாணை ஒன்றின் போது நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலைசெய்தாகக் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து அவரது கட்சியான முஸ்லிம் பிரதர்வுட் தடைசெய்யப்பட்டதுடன் அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

#Egypt   #Mohamed Morsi #நீதிமன்ற விசாரணை #எகிப்தின் #ஜனாதிபதி #மரணம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap