12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில 24 வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வென்றுள்ளது. நேற்றையதினம் மன்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில்398 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 398 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களால் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரராக இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் உலக சாதனை படைத்துள்ளார். அவர் 17 , 6 ஓட்டங்களை பெற்று இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் இந்தப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக 25 6 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களை பெற்ற அணியாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
#உலகக் கிண்ண #ஆப்கானிஸ்தான் #இங்கிலாந்து
Add Comment