இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :

 
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (20) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆகஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில்,சமூம அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை மீட்டுக்கொள்ளுதல், விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறிய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,மக்களின் நில மீட்பு போராட்டங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய உதவித்திட்டங்கள் உற்பட மன்னார்  மாவட்டத்தில் மக்கள் எதிர் கொள்ளும் விடையங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட பிரதி நிதிகள் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#மன்னார்  #பிரச்சினைகள் #ஆராய்வு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.