நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்துள்ள இயக்கனர் எழில், இறுதியாக ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது இயக்குனர் எழிலின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ மற்றும் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய திரைப்படங்களை எழில் இயக்குகின்றார்.
இந்நிலையில், இந்தத் திரைப்படங்களை இயக்கி முடித்த பின்னர், பார்த்திபன் நடிக்கும் புதிய திரைப்படத்தை எழில் இயக்கவுள்ளார். திரைப்படம் இயக்கும் ஒருவர் சந்திக்கும் சிக்கல்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.
தான் நடிக்கும் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் பார்த்தீபன், எழிலின் புதிய திரைப்படத்தில் நடிப்பது விசேட அம்சமாக கருதப்படுகின்றது.
#எழில் #பார்த்திபன் #ஜி.வி. பிரகாஷ் #ஆயிரம் ஜென்மங்கள்
Spread the love
Add Comment