நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என்று வவுனியா காவல் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். குறித்த சிறுவர்கள் நேற்று முந்தினம் முதல் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா காவல் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
19 வயதுடைய விஜயசுந்தர் தர்சன் வயது, 16 வயதுடைய விஜயசுந்தர் நிதர்சன் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Spread the love
Add Comment