பிரதான செய்திகள் விளையாட்டு

இந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்களால் வென்றுள்ளது

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற 28 வது லீக் போட்டியில்; இந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது

சவுத்தாம்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் தலா 2 விக்கெடடுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 225 என்ற வெற்றிஇலக்குடன் களமறிங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் 11 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டுக்களும் பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெடடுக்களையும் ; வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

#இந்திய அணி  #ஆப்கானிஸ்தானை #வென்றுள்ளது #உலகக்கிண்ண

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap