பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடுமையாக பரவி வருகின்ற நிலையில் அங்கு நோய் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதனால் கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் நோய் பாதிப்பால் 117 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்க்பபட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது அங்கு பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #பீகார் #மூளை காய்ச்சல் #பலியானோர் #அதிகரிப்பு
Add Comment