இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு..

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சரவைக்கு உள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ஆசூ மாரசிங்க தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, கல்வி தொடர்பான மேற்பார்வை தெரிவுக் குழுவானது கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் உடனடியாக பொறுப்பேற்க வேண்டுமென பரிந்துரைத்திருந்தது.

அதற்கமைய, குறித்த தெரிவுக்குழு இந்த வாரம் இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுக்குமென எதிர்பார்ப்பதாகவும் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார். #மட்டக்களப்புபல்கலைக்கழகம் #ஆசூ மாரசிங்க #அமைச்சரவை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.