இலங்கை பிரதான செய்திகள்

வெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..


வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150 கைதிகளும் அடுத்த மாதத்தில் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படுவர் என சிறைச்சாலை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். #வெலிக்கடைசிறைச்சாலை #பூசாசிறைச்சாலை #கைதிகள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.