சினிமா பிரதான செய்திகள்

மீண்டும் விஜய்யுடன் சத்தியராஜ்


அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிகில் திரைப்படத்தில் புதிதாக பிரபல நடிகர் சத்தியராஜ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றார். இளம் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் 3ஆவது முறையாக விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் சுவரொட்டி வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்னு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

தற்போதைய இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விஜய்க்கு தந்தையாக வருகிறார் என்றும் சொல்லப்படுகின்றது. விஜய்யுடன் சத்யராஜ் நண்பன், தலைவா, மெர்சல் படங்களுக்கு பின்னர் இணையும் படம் இதுவாகும். #மீண்டும் #விஜய் #சத்தியராஜ் #அட்லி #பிகில் #நயன்தாரா #ஏ.ஆர்.ரகுமான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers