உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணி முதலாவது அணியான அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக நேற்றைய தினம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அவுஸ்திரேலியா இவ்வாறு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து 286 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 44.4 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
#உலகக்கிண்ண கிரிக்கெட் #அவுஸ்திரேலியா #அரையிறுதி #இங்கிலாந்து
Spread the love
Add Comment