பிரதான செய்திகள் விளையாட்டு

நியூஸிலாந்தினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களினால் வென்று அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. இரு அணிகளுக்குமிடையில் நேற்றையதினம் பேர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 238 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி போட்டியிட்ட 7 போட்டிகளில் 3 இல் வெற்றியை சந்தித்து 7 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் அந்த அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளதுடன் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு நுழைவது பெரும்பாலும் உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஐ.சி.சி. #நியூஸிலாந்தினை #பாகிஸ்தான்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.